பி. எஸ். என். ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
பி. எஸ். என். ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பது திண்டுக்கல் மாவட்டம் கோதண்டராமன் நகரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியாகும். இது 1994 ஆம் ஆண்டு ஆர். எஸ். கோதண்டராமன் என்பவரால் தொடங்கப்பட்டு, ஸ்ரீ ரங்கலெட்சுமி கல்வி அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. என்ஏஏசி தரமதிப்பீட்டில் ஏ++ மற்றும் சிஜிபிஏ மதிப்பில் 3.65 புள்ளிகளும் பெற்றுள்ளது. இக்கல்லூரி திண்டுக்கல் அருகே உள்ள முத்தானம்பட்டியிலிருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) மைல் தூரத்தில், தேசிய நெடுங்சாலையில் அருகே 45 எக்டர் பரப்பளவில் உள்ளது. பச்சேரி நல்லதங்காள் அம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பதே பி.எஸ்.என்.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தன்னாட்சி பெறாத சுமார் 500க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இக்கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.